Posts
Showing posts from August, 2016
Wagah Movie Review
- Get link
- X
- Other Apps
தமிழ் சினிமாவில் ஆடியன்ஸிற்கு நரம்பு புடைக்கும் படி ஒரு சில படங்கள் வரும். அந்த வகையில் ஹரிதாஸ் என்ற தரமான படத்தை இயக்கிய குமரவேலின் அடுத்த படைப்பு தான் இந்த வாகா. இதுவரை மிலிட்ரியை பற்றி மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த வாகா முதன் முறையாக இந்திய பார்டரில் வேலைப்பார்க்கும் ஆர்மி ஆபிசர்ஸ் பற்றி கூறியுள்ளனர். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் சிறைச்சாலையில் விக்ரம் பிரபு இருக்க, ப்ளாஷ்பேக் காட்சிகளாக படம் விரிகிறது. விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என எண்ண, அவருடைய தந்தை மளிகை கடையில் வந்து உட்கார் என கூறுகிறார், தந்தையின் தொல்லையில் இருந்து விடுபடவும், மிலிட்டிரியில் சரக்கு கிடைக்கும் என்பதற்காகவும் BSF-ல் வேலைக்கு சேர்கிறார். அங்கு தனிமையில் வாட, இதற்கு சொந்த ஊரே பராவயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகிறார், அந்த தருணத்தில் யதார்த்தமாக ஹீரோயினை பார்க்க, பிறகு என்ன பார்த்தவுடன் காதல், பட்டாம்பூச்சி பறக்க, பல்ப் வெடிக்க அவர் பின்னே சுற்றுகிறார். பிறகு காஷ்மீரில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும்...
Thirunaal Movie Review
- Get link
- X
- Other Apps

ஜீவா நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் திருநாள். இதற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் இயக்க, ஸ்ரீ இசையமைத்துள்ளார். கதைக்களம் தஞ்சாவூர், கும்பக்கோணம் இந்த இரண்டு ஊரிலும் நாகா(சரத்) வைத்தது தான் சட்டம், ஒரு முறை அவர் உயிரை பறிக்க வருபவனை கொன்று ஜீவா நாகாவிடம் நற்பெயரை சம்பாதித்து அந்த கூட்டத்தில் ஒருவனாகின்றான். எதற்கு எடுத்தாலும் வெட்டுக்குத்து என ஜீவா யார் பேச்சையும் கேட்காமல் நாகா சொல்வதை மட்டும் கேட்டு, பல அநியாய வேலைகளை பார்க்கிறார், கிட்டத்தட்ட ஒரு கடவுள் போல் நாகவை ஜீவா பார்த்து வருகிறார். ஒருக்கட்டத்தில் நாகா, தன்னை வெறும் கூலிக்காக மட்டுமே தான் பயன்படுத்துகிறார் என தெரியவர, இனி சண்டை எதுவும் வேண்டாம் என ஜீவா ஒதுங்கி இருக்கிறார், ஆனால், எங்கு சென்றாலும் தன்னை பிரச்சனைகள் சூழ்ந்து நிற்க ஜீவா மீண்டும் அருவாளை எடுக்க, போகப்போகும் உயிர் ஜீவாவா? நாகாவா? என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் ஜீவ...