Kabali Review

வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது...இதோ... கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல். அவர் சிறையிலிருந்து வந்த உடனே ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின் கதைப்போக்கு மாறுகிறது. க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா எ...