Iru Mugan Review
கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரமின் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ். பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான ஸ்கீன் ப்ளேயால் மிரட்டியிருக்கிறார் ஆனந்த ஷங்கர். படத்தை பற்றிய அலசல் விக்ரம் இன்னும் எத்தனை படத்தை தாங்கி பிடிப்பார் என்று தெரியவில்லை, ஒரே ஆளாக முழுப்ப...