Rekka Movie Review
விஜய் சேதுபதியின் முதல் மாஸ் முயற்சி என்பதே றெக்கைக்கு ரசிகர்களின் மனதில் கிடைத்த மிக பெரிய எதிர்பார்ப்பு. இந்த முதல் முயற்சியை அவர் ஒப்படைத்திருப்பது 'வா டீல்' பட இயக்குனர் ரத்தின சிவாவிடம், எந்த அளவு இருவரும் வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். படத்தின் ஆரம்பித்திலேயே தாதா காபிர் கான் இன்னொரு தாதாவான ஹரிஷ் உத்தமனின் தம்பியை கொல்கிறார் அவரை தக்க சமையத்தில் பழி வாங்குவேன் என்று பின்னவர் சபதமெடுக்கிறார். விஜய் சேதுபதி தந்தை கே எஸ் ரவிக்குமார் மற்றும் தாய் தங்கையுடன் கும்பகோணத்தில் வசிக்கிறார். நண்பன் சதீஷுடன் சேர்ந்து மாப்பிள்ளையை பிடிக்காத மணப்பெண்களை கடத்தி இஷ்ட பட்டவர்களுடன் சேர்த்து வைப்பதில் பெயர் போனவர்கள். ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனின் திருமணத்திலேயே மணப்பெண்ணை கடத்தி விடுகிறார்கள் ஆனால் ஹரிஷ் தன் கொடூரத்தை காட்டாமல் விட்டு விடுகிறார். விஜய் சேதுபதியின் தங்கை கல்யாணத்தன்று சதிஷ் செய்யும் ஒரு சில்மிஷத்தால் மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஹரிஷ் ஹீரோவிடம் மதுரையிலிரு...