Devi Review
பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது
மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என
முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இப்படம் தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது.
தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம்.
பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார், ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.
திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம் ஒரு சில மாற்றங்களை உணர்கிறார், என்ன என்று பார்த்தால் அவர் உடலில் ரூபி என்ற ஆவி புகுந்துள்ளது தெரிகிறது, ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறார்.
பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா எப்படி ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை.
ஆனால், படத்தின் ரியல் ஹீரோ தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி மிரட்டியெடுத்துள்ளார், அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே சவால் தான்.
ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் கவர்கிறார், படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது.
படத்தின் காமெடி காட்சிகள், அதிலும் தமன்னா உடலில் பேய் புகுந்தவுடன் செய்யும் அட்டகாசம்.
பார்த்து பழகிப்போன பேய் ட்ராமா.
மொத்தத்தில் தேவி கண்டிப்பாக ஏண்டா சென்றோம் என்று வருத்தப்பட வைக்காது, ஒரு முறை பார்க்கலாம்.
தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கோலிவுட்டே பேய் பிடியில் இருந்து தற்போது மீண்டு வர, இயக்குனர் விஜய் பாலிவுட் வரை தற்போது இந்த பேய் ட்ரெண்டை எடுத்து கொண்டு சென்றுள்ளார், மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார், ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.
திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம் ஒரு சில மாற்றங்களை உணர்கிறார், என்ன என்று பார்த்தால் அவர் உடலில் ரூபி என்ற ஆவி புகுந்துள்ளது தெரிகிறது, ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறார்.
பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா எப்படி ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரே வார்த்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிங்க பிரபுதேவா சார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது, அதே எனர்ஜி இன்னும் அவரிடம், டான்ஸ், காமெடி என கலக்குகிறார். அதிலும் தன் திருமணத்தை மறைக்க பிரபுதேவா செய்யும் வேலைகள் ரசிக்க வைக்கின்றது.ஆனால், படத்தின் ரியல் ஹீரோ தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி மிரட்டியெடுத்துள்ளார், அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே சவால் தான்.
ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் கவர்கிறார், படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது.
க்ளாப்ஸ்
பிரபுதேவா, தமன்னாவின் நடிப்பு.படத்தின் காமெடி காட்சிகள், அதிலும் தமன்னா உடலில் பேய் புகுந்தவுடன் செய்யும் அட்டகாசம்.
பல்ப்ஸ்
டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை,பார்த்து பழகிப்போன பேய் ட்ராமா.
மொத்தத்தில் தேவி கண்டிப்பாக ஏண்டா சென்றோம் என்று வருத்தப்பட வைக்காது, ஒரு முறை பார்க்கலாம்.
Comments
Post a Comment