Surya's S3 movie review

ஒரு கூட்டணி ஒரு படம் ஹிட் கொடுக்கலாம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுக்கலாம். தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்த கூட்டணி தான் ஹரி-சூர்யா கூட்டணி. சூர்யாவிற்கு எப்போதெல்லாம் ஒரு தடுமாற்றம் வருகிறதோ, இயக்குனர் ஹரி தன் சிங்கம் சீரியஸ் மூலம் தாங்கிபிடிப்பார். அப்படி இந்த முறையும் தாங்கிபிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் ஆந்திரா பகுதியில் ஒரு கமிஷ்னரை கொலை செய்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்க, ஆந்திரா போலிஸார் சூர்யாவை அழைக்க, அவர் அந்த கேஸை கையில் எடுக்கின்றார். இந்த கேஸை சூர்யா தோண்ட தோண்ட பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றது. இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெடிக்கல் கழிவுகளை இந்தியாவில் ஒரு கும்பல் கொடுக்கிறது. இதை கண்டுப்பிடிக்கும் சூர்யா பிறகு எப்படி அந்த கும்பலை வேட்டையாடுகிறார் என்பதை ஜெட் வேகத்தில் கூறியிருக்கிறார் ஹரி. படத்தை பற்றிய அசலம் படத்தின் மொத்த பலமும் சூர்யா தான். தன் தோளில் அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றது போல், மொத்த படத்தையும் தூக்கி செல்கிறார். அதென்னமோ போலிஸ் உடையை அணிந்தாலே சூர்யா 1000 வாலா பட்டாசாக வெடிக்கின்றார். அனுஷ்கா கம்பெனி ஆர்டிஸ்ட் போல் ...