Bogan tamil movie review
கதைக்களம்
அரவிந்த்சாமி மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி தெருவுக்கு வருகிறார், அந்த நேரத்தில் தான் மக்களை ஏமாற்றி, கொள்ளையடித்து, திருடி பணத்தை சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.அவர் ஒரு அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து ஓலைச்சுவடி ஒன்றை எடுக்க, அதை வைத்து கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை கற்க, அதன் பின் பல வங்கிகளில் தன் சக்தியை பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றார்.
அப்படி ஒரு வங்கியில் நரேன் மூலம் கொள்ளையடிக்க, நரேனின் மகனாக வரும் AC ஜெயம் ரவி, தன் அப்பாவை காப்பாற்ற இந்த கேஸில் தீவிரம் காட்டுகின்றார்.
அரவிந்த்சாமியிடம் நண்பர் போல் நடித்து அவரை கைது செய்கிறார் ரவி. ஆனால், அரவிந்த்சாமி தன் சக்தியை பயன்படுத்தி ரவி உடலில் கூடுவிட்டு கூடுபாய, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜெயம் ரவி பல பேட்டிகளில் சொன்னது போல் முழுக்க, முழுக்க அவருக்காகவே எழுதப்பட்ட கதை தான் இந்த போகன். அதிலும் அரவிந்த்சாமி உயிர் தன் உடலுக்குல் வந்ததும் அவர் செய்யும் மேனரிசங்கள் விசில் பறக்கின்றது. ஹன்சிகாவிடம் ஒவ்வொரு முறையும் நெருங்கும் போது வரும் தடை, அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஸன் என தனி ஒருவனில் அரவிந்த்சாமியிடம் விட்டதை இதில் பிடித்துவிட்டார்.அரவிந்த்சாமி முதல் பாதியில் மிரட்டல், இரண்டாம் பாதியில் ஜெயம் ரவி உயிர் தன் உடலுக்குள் வந்ததும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றார். ஏனெனில் தனி ஒருவனில் வில்லன் என்பதால் லிமிட்டே இல்லாமல் ஸ்கோர் செய்தார். இதில் இரண்டாம் பாதியில் நல்லவன் வேஷம் என்பதால் ரவிக்கு வழிவிட்டு தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஹன்சிகா தண்ணி அடித்துக்கொண்டு நடிக்கும் காட்சிகள் எல்லாம் ஓவர் ஓவர் ஆக்டிங். இனிமேலாவது கொஞ்சம் தனக்கு ஸ்கோப் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருந்தாலும் வீட்டில் இருப்பது ஜெயம் ரவி உடலில் அரவிந்த் சாமி உயிர் தான் என தெரியாமல் இவர் நடந்துக்கொள்ளும் காட்சி எல்லாம் எஸ்.ஜே.சூர்யா ஸ்டைல் லக்ஷ்மனன்.
முதலில் படத்திற்கு எப்படி யு சான்றிதழ் வழங்கினார்கள் என்றே தெரியவில்லை. ஒரே குடி, தம், கஞ்சா என முதல் பாதி முழுவதும் போதையே நிரம்பி வழிகின்றது. ஒளிப்பதிவு பாலிவுட் படத்திற்கு நிகராக கலர்புல்லாக இருக்கின்றது.
பாடல்கள் செந்தூரா தவிர ஏதும் கவரவில்லை, பின்னணி இசை கேட்டு கேட்டு பழகிய இசை தான். இமான் சார் ரோமியோ ஜுலியட் அளவிற்கு இல்லை.
க்ளாப்ஸ்
ஜெயம் ரவி-அரவிந்த் சாமி கெமிஸ்ட்ரி, தனி ஒருவனில் பார்த்தாலும் எங்கும் அலுப்பு தட்டவில்லை.இரண்டாம் பாதியில் வரும் ஆடு புலி ஆட்டம் ரசிக்க வைக்கின்றது. ஜெயம் ரவியின் நெகட்டீவ் கதாபாத்திரம் இன்னும் கவர்கின்றது.
பல்ப்ஸ்
லாஜிக் மீறல், அதிலும் கிளைமேக்ஸில் அத்தனை போலிஸ் இருக்கும் போது அரவிந்த்சாமி மிக ஈஸியாக தப்பித்து செல்கின்றார்.படத்தின் முடிவு மிகவும் நாடகத்தன்மையாக உள்ளது.
மொத்தத்தில் தனி ஒருவனை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும், ரோமியோ ஜுலியட்டை நினைத்து வருபவர்களுக்கு கொஞ்சம் திருப்தியும் கொடுக்கும் இந்த போகன்.
Comments
Post a Comment