Kamal stray from the floor - to hospital

கமல்ஹாசன் சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இப்படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் தவறி விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் மற்றும் கால் எலும்பு முறிவடைந்தது.
இதனை தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இவர் குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments

  1. Kadavulai nambada kamalukkaga kadavulidam avar seekiram gunamadaiya praarthikkiren.

    ReplyDelete
  2. Kadavulai nambada kamalukkaga kadavulidam avar seekiram gunamadaiya praarthikkiren.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran