Kattapavakanom Movie Review

தமிழ் சினிமாவில் சில பேர் ஒரு வெற்றிக்காக மிகவும் போராடுவார்கள். அந்த வெற்றி மனிதர்கள் மூலமாக கிடைக்கின்றதோ, இல்லையோ சிபிராஜிற்கு நாய், பேய் ஆரம்பித்து தற்போது மீன் வரை வந்துள்ளது. அதிலும் தன் அப்பா பேவரட் கட்டப்பாவை உள்ளே கொண்டு வர இந்த கட்டப்பா சிபிராஜை காப்பாற்றினாரா பார்ப்போம்.

கதைக்களம்

சிபிராஜ் எங்கு சென்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வி தான். அதனாலேயே அவர் அப்பா கூட இவரை பேட்லக் பாண்டியா என்று தான் அழைக்கின்றார்.
இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஸுடன் பார்த்தவுடன் காதல், தன் அப்பாவின் பேச்சை மீறி கல்யாணம் என செட்டில் ஆகின்றார்.
அதே நேரத்தில் லோக்கல் டான் மைம் கோபி வைத்திருந்த தன் ராசி மீன் கட்டப்பா தொலைந்து போக, அது சிபிராஜிடம் வந்து சேர்கின்றது. மீன் வந்த நேரம் சிபிராஜ் வாழ்க்கை வேறு திசைக்கு செல்ல, அந்த மீனை தேடி கோபி அலைய கடைசியில் அந்த மீனால் யார் யாருக்கு என்ன ஆனது, மீன் யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கூறியுள்ளார் அறிமுக இயக்குனர் மணி செயான்.

படத்தை பற்றிய அலசல்

சிபிராஜ் பேட்லக் பாண்டியாக ஒரு கட்டத்தில் தான் சினிமாவில் போராடியது பின் சான்ஸ் கிடைத்ததும் அதை அலேக்காக பிடித்தது என்று ரியல் லைப் போல் நடித்துள்ளார். அதிலும் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டு அதிலிருந்து அவர் எஸ்கேப் ஆக செய்யும் காட்சி என அதகளம் தான்.
ஐஸ்வர்யா ராஜேஸ் நீங்க என்ன கேரக்டர் வேண்டுமானாலும் கொடுங்க நா ஸ்கோர் பண்றேன்னு கலக்கியுள்ளார். படம் முழுவதும் மிகவும் டல் மேக்கப்பில் தான் இருக்கிறார். ஒரு காட்சியில் நான் கருப்புன்னு கிண்டல் பண்றீயான்னு சொல்றாங்க, தனி தைரியம் வேனும்மா இப்படியெல்லா சொல்லி நடிக்க, சூப்பர்.
படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி உதவி இயக்குனர் போல, சூது கவ்வும் பாணியிலேயே உள்ளது. அதுக்குன்னு இரண்டு சீன்ல மியூஸிக் கூட அந்த படத்தோடதே வருது, படத்தின் ஒன் மேன் ஷோ காளி வெங்கட், கிடைக்கிற கேப்ல எல்லாம் கவுண்டர் செக்ஸர் தான்... சாரி சிக்ஸர் தான். அடல்ட் ஒன்லீ காமெடி தான், 18 வயதுக்கு உட்பட்டோர் வந்தால் காதை மூடிக்கோங்க அந்த கிரிக்கெட் பார்க்கு காட்சி எல்லாம் சிரிப்பிற்கு புல் கேரண்டி. கிளைமேக்ஸில் கூட ஹோட்டலில் ' எவனோ கராத்தே மாஸ்டர் ட்ரஸ்ப்பா இது' சொல்லும் இடம் சார் கலக்குறீங்க.
கட்டப்பா என்கின்ற மீன் தான் படத்தின் மையக்கரு, அட மீன வச்சு எப்படி 2 மணி நேர படத்த எடுப்பாங்கன்னு யோசிச்சா, அதையும் சுவாரசியமா எடுக்க முடியும் என அசத்தியிருக்கிறார் இயக்குனர். யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், பேபி மோனிகா, ஜெய்குமார், திருமுகன் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர், அதிலும் ஜெய்குமார். எல்லாம் ரோபோ ஷங்கர் மெட்டிரீயல் நல்ல யூஸ் பண்ண நல்ல காமெடியன் ரெடி.
ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செம்ம லைவ்வாக உள்ளது, சந்தோஷ் தயாநிதி இசையில் ஒரே பாடல் நன்றாக உள்ளது, பின்னணி இசையில் கவர்ந்தாலும் சந்தோஷ் நாராயணன் பதிப்பு அதிகம் சார்.

க்ளாப்ஸ்

ஒரு சிம்பிள் ஸ்டோரி, அதை எந்த இடத்திலும் அலுப்பு இல்லாமல் கொண்டு போன திரைக்கதை.
கதை மீனை பற்றி என்பதால் மீன் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் அய்ரா, ஆலி, சுறா என இருப்பது ரசிக்கும் ரகம்.
காளி வெங்கட்டின் கவுண்டர் அட்டாக்.

பல்ப்ஸ்

வேலையும் இல்லாமல், வீட்டார் சம்மதமும் இல்லாமல் அத்தனை காஸ்ட்லீ அப்பார்மெண்டில் சிபி ஐஸ்வர்யா இருப்பது கொஞ்சம் யதார்த்தம் விட்டு விலகுகிறது.
முதல் பாதி இன்னமும் சுவாரசியம் கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் படம் எப்படின்னு கேட்குறீங்களா...அதெப்படிங்க கட்டப்பான்னு பேர் வச்சுட்டு சிபிராஜ காப்பாற்றாமல் இருக்க முடியுமா?? நம்பி கட்டப்பாவை தேடலாம்.

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran