BruceLee Tamil Movie Review

ஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை கண்டிப்பாக போக்கும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. இந்நிலையில் டார்க் ஹியுமர் படங்களின் வரிசையில் இந்த வாரம் ஜி.வி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் புருஸ்லீ, புருஸ்லீயின் பன்ச் எப்படி இருந்தது? பார்ப்போம்.

கதைக்களம்

ஜிவி சின்ன வயதில் இருந்து அனைத்திற்கும் பயந்து வாழ்கிறார், அதற்காக அவருடைய அம்மா தைரியத்திற்காக புருஸ்லீ என்று பெயர் வைக்கின்றார்.
தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கும் ஜிவி முனிஷ்காந்த், மன்சூர் அலிகானை கொல்வதை போட்டோ எடுக்கின்றார். அதை தொடர்ந்து ஜிவி தன் காதலி கீர்த்தியிடம் இதை காட்ட, அவர் எப்படியாவது இதை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார்.
கோர்ட், போலிஸ் வரை முனிஷ்காந்த் ஆட்கள் இருக்க, ஜிவி கொரியர் பாயாக எடுத்த போட்டோக்களை கமிஷ்னரிடம் கொடுக்கின்றார்.
ஆனால் கமிஷ்னரே முனிஷ்காந்த் ஆள் தான். பிறகு உண்மை தெரிந்து கீர்த்தி கடத்தப்பட, ஜிவி இந்த கும்பலை எப்படி சமாளித்து தன் காதலியை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளரிலிருந்து தவறாக ஹீரோ முடிவிற்கு வந்துவிட்டாரோ என அவரின் கதை தேர்வு கடந்த சில படங்களாக தெரிகின்றது. அடுத்து வரும் படங்கள் எல்லாம் தரமான படம் அதில் புதிய ஜி.வியை எதிர்ப்பார்க்கலாம். அது சரி இந்த படத்தில் எப்படி நடித்துள்ளார்? என்று கேட்கிறீர்களா?, த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு அதில் என்ன செய்தாரோ அதை தான் இதிலும் செய்துள்ளார்.
ஹீரோயின் கிரிதி கிளாமர் இருக்க வேண்டும் என்பதற்காக இவரும் படத்தில் இருக்கின்றார். பாலசரவணன் டார்லிங் அளவிற்கு கூட இல்லையே, என்ன ஆச்சு உங்கள் காமெடிக்கும், ஒரே ஆறுதல் மொட்டை ராஜேந்திரன், பல கெட்டப்புகளில் அவர் செய்யும் கலாட்டா ரசிக்க வைக்கின்றது.
டார்க் ஹியுமர் படம் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், படத்தின் ஹியூமர் எங்கு என்று தான் தேட வேண்டியுள்ளது. வா மச்சான் சொல்வதெல்லாம் உண்மை பார்ப்போம் அப்படின்னு பாலசரவணன் சொல்றாரு(இதெல்லாம் ஹியுமர்), இப்படி இன்றைய ட்ரண்ட் விஷயங்களை படத்தில் சொன்னால் மட்டும் சிரிப்பு வந்துவிடுமா? பிரஷாந்த் பாண்டிராஜ் அவர்களே. முனிஷ்காந்த், ஆனந்த்ராஜ் தங்கள் போஷனை சிறப்பாக செய்துள்ளனர். அதிலும் முனிஷ்காந்த் ஆங்கிலப்படத்தை பார்த்து செய்யும் சேட்டைகள் கலக்கல்.
சமீப காலமாக தான் பெண்களை தரக்குறைவாக பேசும்படி எந்த படமும் வரவில்லை. ஆனால், இதில் படத்திற்கு வரும் பசங்க கைத்தட்ட வேண்டும் என்பதற்காகவே பல இடங்களில் பெண்களுக்கு ரைய்டு விழுகின்றது. அதற்கு விசில் அடித்து கைத்தட்டுகிறார்கள் ஆடியன்ஸும், தவறு சினிமாக்காரங்க மேல் மட்டும் இல்லை.
அதிலும் ஒரு காட்சியில் ஹீரோயின் ‘என்னடி இவர் ரேப் கூட பண்ண மாட்றா’ அப்படின்னு சொல்றாங்க, என்ன சார் டயலாக் இதெல்லாம் என்று இயக்குனரை கேட்க தோன்றுகிறது. ஜி.வி தயவு செய்து இசை பொறுப்பை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள். ஒளிப்பதிவு மட்டும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது.

க்ளாப்ஸ்

மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகள். முனிஷ்காந்த் நடிப்பு.

பல்ப்ஸ்

க்ளாப்ஸில் சொன்னதை தவிர்த்து மற்ற அனைத்தும்.

மொத்தத்தில் புருஸ்லீயின் பன்ச் இத்தனை மோசமாக இருப்பது இதில் தான்.

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran