Kavan Tamil Movie Review

தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்திர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவன் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர்.
விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர்.
அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது.
இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய முடியும் என விஜய் சேதுபதி, டி.ஆர் உடன் கூட்டணி அமைத்து ஆடும் ருத்ரதாண்டவம் தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி இவருக்கு ஹேட்டர்ஸ் என்று யாரும் இருக்க முடியாது, பார்த்தவுடன் பிடித்துவிடுகின்றது, மடோனாவுடன் காதல், மோதல் பின் மீண்டும் அவர் மனதில் இடம்பிடிக்க செய்யும் சேட்டைகள், மீடியாவிற்கு என்று ஒரு தர்மம் உள்ளது, நல்ல செய்தியை கூட சென்சேஷ்னலாக காட்ட முடியும் என அதற்காக அவர் எடுக்கு முயற்சி என இந்த படத்தில் அனைத்து செண்டர் ஆடியன்ஸையும் அள்ளி விடுகின்றார் விஜய் சேதுபதி.
டி.ஆர் தான் ரியல் லைபில் எப்படியோ அதே தான் படத்திலும், பட்டையை கிளப்புகின்றார், பாண்டியராஜன், மடோனா, ஜெகன், போஸ் வெங்கட், அயன் படத்தில் வில்லன் என அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர், விக்ராந்திற்கு இந்த படம் கண்டிப்பாக திருப்புமுனை தான், அவரின் காதலியாக வருபவரும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு.
ஒரு சில மீடியாக்கள் குறிப்பாக தொலைக்காட்சி மீடியாக்கள் தங்கள் சேனல் பரபரப்பு குறையகூடாது என்பதற்காக செய்யும் பித்தாலட்டங்களை வெளிப்படையாக காட்டியதற்காகவே கே.வி.ஆனந்தை மனம் திறந்து பாராட்டலாம்.
அதிலும் அழகான பெண்களை கடைசி ரவுண்ட் வரை வர வைப்பது, திறமையை எலிமினேட் செய்வது என பல இடங்களில் நச் கருத்தை ஆழப்பதித்துள்ளார். படத்தின் எடிட்டிங் ஆண்டனிக்கு தனி பூங்கொத்து கொடுக்கலாம், ஒளிப்பதிவும் பிரமாதம், இசை ஹிப் ஹாப் தமிழன் ஆதி, ஹாரிஸ்-கே.வி.ஆனந்த் கூட்டணி அளவிற்கு இல்லை என்றாலும் முடிந்த அளவு நல்ல இசையை கொடுத்துள்ளார்.
ஆனால், ஓவர் பில்டப் உடம்பிற்கு ஆகாது என்பது போல், டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் நன்றாக இருந்தாலும் லைட்டா கண்ண கட்டுது கே.வி சார். நல்ல வேலை இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் சாகவில்லை, அந்த இடத்தில் பாட்டும் வைக்கவில்லை.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், இன்றைய சமூக நிலையை தொலைக்காட்சிகள் எப்படி பயன்படுத்துகின்றது என்பதை தோல் உறித்து காட்டுகின்றது.
படத்தின் வசனங்கள் கபிலன் வைரமுத்து முதல் படம் போலவே தெரியவில்லை.
டி.ஆர், பாண்டியராஜன் போன்ற சீனியர் ஆர்டிஸ்ட் மட்டுமின்றி புதுமுக நடிகர்களை கூட சிறப்பாக பயன்படுத்திய விதம்.

பல்ப்ஸ்


முன்பே சொன்னது போல் டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் மட்டும் கொஞ்சம் லாக்-ஆக தெரிகின்றது.

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran