Fans discovered hidden in the film turns bairava
'பைரவா’ டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா..!?ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்களே!... |
விஜய்யின் 60வது படத்திற்கு ‘பைரவா’ என்று பெயர் வைத்ததும், படத்தில் விஜய்யின் பெயர் பைரவா என்று பலரும் உறுதி செய்திருப்பார்கள். ஆனால் படக்குழு அதனை, டீசர் மற்றும் டிரெய்லரில் உறுதி செய்யவில்லை. அதற்கு மாறாக ‘பைரவா’ படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன என்பதை தற்போது வெளிவந்த டிரெய்லரில் இரண்டு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
‘பைரவா’ டிரெய்லரில் சரியாக 22வது நொடியில் விஜய்யிடம் சதீஷ், “லவ்ல என்ன ‘டார்லிங்’ பெரிய டிரெண்ட்டு, அன்னைக்கு முரளி லெட்டர்ல சொன்ன காதல, அவர் பையன் அதர்வா இன்னைக்கு ட்விட்டர்ல சொல்றாரு”னு சொல்லுவார்.
அடுத்து, டிரெய்லரின் 57வது நொடியில் ஒரு குழந்தை, “டார்லிங்” என கத்திக்கொண்டே ஓடிவந்து விஜய்யை கட்டிப்பிடிக்கும்.
இந்த இரண்டு இடங்களில் தான், ‘பைரவா’ படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் ‘டார்லிங்’ என்பதை குறிப்பிட்டுள்ளனர். ‘தெறி’ படத்தில் எப்படி ‘தெறிபேபி’ என்கிற வார்த்தை ட்ரெண்ட் அடித்ததோ, அதே போல் ‘பைரவா’ படத்திலும் ட்ரெண்ட் அடிக்கக்கூடிய ஒரு வார்த்தை இருக்கிறது என முன்னதாக தகவல்கள் வந்தன. அது இந்த வார்த்தை தானோ..?!?
Comments
Post a Comment