Great escape from trouble 'pairava' Film
பெரும் பிரச்சனையில் இருந்து தப்பியது 'பைரவா'
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்து தற்போது விறுவிறுப்பான புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில்
விஜய்க்கு தமிழகத்தை போலவே மிக அதிகளவிலான ரசிகர்கள் அண்டை மாநிலமான
கேரளாவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அங்கு திரையரங்கு
உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்கள்-தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான
பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக புதிய படங்கள் வெளிவரவில்லை. கடந்த
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டி தினங்களில் புதிய படங்கள் வெளியாகாததால்
மலையாள திரையுலகம் பெரும் சிக்கலில் இருந்தது
இந்நிலையில்
'பைரவா' திரைப்படம் திட்டமிட்டபடி கேரளாவில் வெளியாகுமா? என்ற சந்தேகம்
இருந்தது. இதுகுறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது
திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சமாதான
உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த பிரச்சனை முடிவுக்கு
வந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி ஜனவரி 12-ல்
கேரளாவிலும் 'பைரவா' திரைப்படம் வெளியாகவுள்ளதால் பெரிய பிரச்சனையில்
இருந்து இப்படம் தப்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
Comments
Post a Comment