BalleVellaiyathevaa Movie Review

பொதுவாக ஒரு பாராட்டத்துக்குரிய செயலை செய்யும் போது சொல்லும் ஒரு சொல் பலே வெள்ளையத் தேவா. அதையே தலைப்பாக கொண்டு அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் உடன் சசிகுமார் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் பலே வெள்ளையத்தேவா. இந்த படம் நம்மையும் அப்படி சொல்ல வைத்திருக்கின்றது என்று பார்ப்போம்.

கதைக்களம்

Facebook, Whatsup என இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் நிறைந்த ஒரு கிராமத்திற்கு போஸ்ட் மாஸ்டராக வரும் ரோகிணியும் அவருடைய மகனான சசிகுமாரும், selfie காத்தாயி, கணக்காக வரும் கோவை சரளா, சங்கிலி முருகனனின் வீட்டிற்கு புதிதாக குடிவருகிறார்கள். வந்த இடத்தில ஹீரோ சசிகுமாருக்கு கதாநாயகி தான்யா மீது காதல் வர, ஒரு கட்டத்தில் ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வில்லனாக வரும் வலவனுக்கும் சசிகுமாருக்கும் இடையில் ஒரு பிரச்சனை உண்டாகிறது.
அதன் பின் அந்த பிரச்சனையால் சசிகுமாருக்கும் கோவை சரளாக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகிறது. இதற்கிடையில் கதாநாயகியின் அப்பாவாக வரும் பாலசிங்கம் போலீஸை பார்த்தால் உடனே பயந்து ஓடி ஒளிந்து கொண்டு அறிவாளை தூக்கி கொள்கிறார். அவர் ஏன் எதற்காக அப்படி செய்கிறார் என்ற சுவாரஸ்யத்துடன் செல்கிறது. அதோடு கோவை சரளா சசிகுமாரின் காதலை சேர்த்து வைத்தாரா, வில்லனுக்கும் சசிகுமாருக்கு இடையே இருந்த பிரச்சனை முடிந்ததா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

பொதுவாக சசிகுமாரின் படங்கள் என்றாலே குடும்பங்கள் பார்க்க கூடிய படைப்பாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு ஏற்றார் போல் தான் உள்ளது. சசிகுமாரும் தன்னுடைய வழக்கமான பாணியில் தான் நடித்துள்ளார். கோவை சரளாவை தமிழ் சினிமாவின் அடுத்த ஆச்சி என சொல்லுவது சரியாகத்தான் உள்ளது, ஆச்சி மனோரமா இல்லாத குறையை இவர் தீர்த்துவிட்டார். கோவை சரளாவின் கணவனாக வரும் சங்கிலி முருகனும் சரி, வில்லனாக வரும் வல்லவனும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். அம்மாவாக வரும் ரோஹிணியும் ஒரு தமிழ் சினிமாவின் அம்மாவாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் சோலை பிரகாஷிற்கு இது முதல் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் கதையில் விறுவிறுப்பு கூட்டிருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது. பொதுவாக சசிகுமாரின் படங்கள் என்றாலே காமெடிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க பட்டிருக்கும் இந்த படத்தில் அந்த மாதிரி எதுவும் தெரியவில்லை. தற்புக சிவாவின் பாடல்களும் பின்னணி இசையும் இன்னும் கொஞ்சம் கேட்கும் படி உள்ளதே தவிர ரசிக்கும்படி இல்லை.

க்ளாப்ஸ்

கோவை சரளா, சங்கிலி முருகன் இவர்களின் நடிப்பும் செய்யும் சேட்டைகளும்.
பிளாஷ் பேக்கில் வரும் நாம் சின்ன வயசில் கேட்ட ஒருபாட்டி கதை.

பல்ப்ஸ்

பாடல்களும், பின்னணி இசையும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.
படத்தின் காட்சிகள் சரியாக வரிசை படுத்தாமல் இருப்பது, முதல் பாதி சற்று மெதுவாக போவதும்.

காமெடிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்கிறது

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran