On PC 'Remo' Important information about Remake
சிவகார்த்திகேயன்,
கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம்
தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு
பதிப்பு வெளியானது.
தமிழகத்தை
போலவே 'ரெமோ' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. இதன் தெலுங்கு வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
இந்த
வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், பாக்யராஜ் கண்ணன்,
அனிருத், தில் ராஜூ, பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த
விழாவில் பேசிய பி.சி.ஸ்ரீராம், 'ரெமோ' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில்
வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை
நடந்து வருவதாகவும், முன்னணி பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இந்த படத்தில்
நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே 'ரெமோ' படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment