Nasser shocked by the shock news producers
நடிகர் நாசரின் மகன் லுத்புதீன்பாஷா கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம்
வெளிவரவிருக்கும் படம் பறந்து செல்ல வா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் .
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது, இதில் பேசிய நாசர் நான் ஒரு தகப்பன் என்ற முறையில் இங்கு பேசவரவில்லை, தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன். நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை.
பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந்த படம் பிரச்சினை இல்லாமல் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது நிறைவேறியதில், மகிழ்ச்சி என்று கூறினார் ,

Comments
Post a Comment