Chennai28II Movie Review

ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது.
தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார்.
ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீண்டும் அதே கிரிக்கெட் எப்படி காப்பாறுகின்றது என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை தயார் செய்ததற்காகவே வெங்கட் பிரபுவை பாராட்டலாம், முழுக்க முழுக்க பசங்களுக்காக மட்டுமில்லாமல், முந்தைய பாகத்தைவிட பேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார்.
அதிலும் தற்போது உள்ள மார்க்கெட்டிற்கு ஏற்றார் போல் ஜெய், சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்தை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார், அதிலும் சிவா வந்து நின்றாலே சிரிப்பு சத்தம் வந்துவிடுகின்றது, அவதார் படம் எந்த படத்தின் காப்பி என விமர்சனம் செய்வது, ஓடி போய் கல்யாணம் செய்யலாம் என்று கூறியவுடன், கட் செய்து இது அலைப்பாயுதே ஸ்டைல் என்று சொல்வது எல்லாம் செம்ம சார்.
முந்தைய பாகத்தின் நினைவுகள் அனைத்தும் சில இடங்களில் வந்து செல்வது ரசிக்க வைக்கின்றது, அதிலும் கோபி மறுபடியும் தன் பேட்டை வாங்கினாரா? என்பதை காட்டிய விதம் விசில் பறக்கின்றது.
படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பின்னணி இசை, அதிலும் பேட் பாய்ஸ் மற்றும் வைபவிற்கு வரும் பின்னணி இசை சூப்பர், ஒளிப்பதிவு தேனி, சென்னை என அனைத்தையும் ரசிகர்களுடன் ஒன்ற வைக்கின்றாது.
ஆனால், முந்தைய பாகத்தில் கிரிக்கெட், கிரிக்கெட் என்று தான் கதை நகரும், இந்த பாகத்தில் கமர்ஷியலுக்காக சில விஷயங்களை உள்ளே நுழைத்தது, ஹவுஸ்பார்ட்டி பாடல் என கொஞ்சம் யதார்த்தம் மீறுகின்றது.

க்ளாப்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம ஜாலியாக ஒரு கதைக்களம், அதற்கு திரைக்கதை அமைத்த விதம்.
ஜெய், சிவா, விஜய் வசந்த் என அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடித்துள்ளனர், ப்ரேம்ஜி மற்ற அண்ணன் படத்தை விட அதிகம் அடக்கி வாசித்துள்ளார், அதுவும் சென்ற பாகத்தில் கேட்ஸ் போல், இதில் ஒரு பந்தை தேக்கும் காட்சி சூப்பர்.
கிரிக்கெட் சம்மந்தப்பட்ட காட்சிகள், பின்னணி இசை.

பல்ப்ஸ்


சென்ற பாகத்தில் இருந்த யதார்த்தம் மற்றும் அதிரடி பாடல்கள் மிஸ்ஸிங்.

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran