Posts

Showing posts from 2016

Gravel supporting Silambarasan

Image
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம் 2017ஆம் ஆண்டு தமிழர் திருநாளில் ஜல்லிக்கட்டை நடத்தவிட வேண்டும் என்று பலரும் பல விதமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். “ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித்துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர். அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கியகடமை என்று மல்லுக் கட்டுவது ஏன் என்பது எனக்கு  புரியவில்லை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதி...

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Image
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்டில் கொடுப்பார்கள் என காத்திருக்க, அவர்களுக்காகவே வந்துள்ளது இந்த துருவங்கள் பதினாறு.   கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை, ஒரு விபத்து நடக்கின்றது, இதை கண்டுப்பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார் ரகுமான். அதை தொடர்ந்து இந்த கொலைகளை யார் செய்தது, அந்த விபத்து எப்படி நடந்தது, இந்த கொலைக்கும், அந்த விபத்திற்கும் என்ன சம்மந்தம் என அடுத்தடுத்து பல டுவிஸ்டுகளுடன் படம் நகர்கின்றது. படத்தின் கதை இனி சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக இதோடு நிறுத்தியுள்ளோம். படத்தை பற்றிய அலசல் கிரைம் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே வருவது அரிது, பெரிதும் ஹாலிவுட், கொரீயன் படங்களில் தான் இதுப்போன்ற புலானய்வு கிரைம் படங்கள் வரும். கொரீயன் பட பாணியில் எந்த ஒரு படத்தின் தழுவலும் இல்லாமல் இருக்கின்றது இந்த துருவங்கள் பதினாறு. மேலும், படத்தில் ரகுமானை தவிர வேறு எந்த முகங்களும் நமக்கு பரிச்சயம் இல்லை, ...

BalleVellaiyathevaa Movie Review

Image
பொதுவாக ஒரு பாராட்டத்துக்குரிய செயலை செய்யும் போது சொல்லும் ஒரு சொல் பலே வெள்ளையத் தேவா. அதையே தலைப்பாக கொண்டு அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் உடன் சசிகுமார் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் பலே வெள்ளையத்தேவா. இந்த படம் நம்மையும் அப்படி சொல்ல வைத்திருக்கின்றது என்று பார்ப்போம். கதைக்களம் Facebook, Whatsup என இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் நிறைந்த ஒரு கிராமத்திற்கு போஸ்ட் மாஸ்டராக வரும் ரோகிணியும் அவருடைய மகனான சசிகுமாரும், selfie காத்தாயி, கணக்காக வரும் கோவை சரளா, சங்கிலி முருகனனின் வீட்டிற்கு புதிதாக குடிவருகிறார்கள். வந்த இடத்தில ஹீரோ சசிகுமாருக்கு கதாநாயகி தான்யா மீது காதல் வர, ஒரு கட்டத்தில் ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வில்லனாக வரும் வலவனுக்கும் சசிகுமாருக்கும் இடையில் ஒரு பிரச்சனை உண்டாகிறது. அதன் பின் அந்த பிரச்சனையால் சசிகுமாருக்கும் கோவை சரளாக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகிறது. இதற்கிடையில் கதாநாயகியின் அப்பாவாக வரும் பாலசிங்கம் போலீஸை பார்த்தால் உடனே பயந்து ஓடி ஒளிந்து கொண்டு அறிவாளை தூக்கி கொள்கிறார். அவர் ஏன் எதற்காக அப்படி ச...

Kaththi Sandai Review

Image
விஷால், சுராஜ் இருவருமே ஒரு வெற்றிக்காக சில வருடங்களாக போராடி வருகின்றனர். இவர்கள் இருவருமே இணைந்து வைகைப்புயல் என்ற கூடுதல் பலத்துடன் களம் இறங்கியிருக்கும் படம் தான் கத்தி சண்டை. கத்தி சண்டைக்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கண்டேய்னர் நிறைய பணம் போலிஸாரால் கைப்பற்றப்படுகின்றது. அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி கவர்மெண்டில் ஒப்படைக்கின்றார். இதை தொடர்ந்து விஷால் அப்பாவியாக எண்ட்ரீ ஆகி தமன்னாவிடம் பொய்கள் எல்லாம் சொல்லி காதலிக்க வைக்கின்றார். அதை தொடர்ந்து தமன்னாவின் அண்ணன் விஷாலுக்கு பல டெஸ்ட் வைத்து நீ தான் என் மாப்பிள்ளை என்று கூறுகிறார். பிறகு ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணத்தை கேட்டு மிரட்டுகின்றது. பிறகு தான் தெரிகிறது, ஜெகபதி பாபு ரூ 50 கோடியை மட்டும் அரசாங்கத்திடம் கொடுத்து ரூ 250 கோடியை பதுக்கியுள்ளார் என்று, அந்த பணத்தை தமன்னாவுடன் காதல் நாடகம் செய்து விஷால் கைப்பற்ற, அவர் யார்? எதற்காக பணத்தை எடுத்தார்? என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விஷால் இதேபோல் தான் பல படங்களில் நடிக்கின்றார். கொஞ்...

VeeraSivaji Tamil Movie Review

Image
விக்ரம் பிரபு இது என்ன மாயம், வாகா போன்ற படங்களால் கொஞ்சம் சறுக்கலில் உள்ளார். இவருக்கு இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் தகராறு படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயக் கூட்டணியில் வீரசிவாஜி படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார். விக்ரம் பிரபு சறுக்கலில் இருந்து மீண்டாரா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக பாண்டிச்சேரியில் இருக்கிறார். அவர் அனாதையாக இருந்தாலும் சொந்த அக்கா போல் பாத்துக்கொள்கிறார் வினோதினி. வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ரூ 25 லட்சம் தேவைப்படுகின்றது. கால் டாக்ஸி விற்று ரூ 5 லட்சம் ஏற்பாடு செய்கிறார், அந்த நேரத்தில் தான் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கின்றது. அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி செல்கிறார். அதன் பிறகு அந்த கும்பலை கண்டுப்பிடித்தாரா, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக வந்தாலும் கலர்புல்லாக தான் இருக்கிறார், ஆக்‌ஷனில் அதிரடி காட்டினாலும் இன்னும் ரொமான்ஸ...

Time for A.R.Rahman’s Oscar again?

Image
'பீலே' படத்தின் 'ஜிங்கா' பாடலின் இசைக்காக, மீண்டும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 2009-ம் ஆண்டு வெளியான 'ஸ்லம் டாக் மில்லினர்' படத்தின் பின்னணி இசை மற்றும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவிருக்கும் 89-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 'Pele: Birth of a Legend' படத்தின் இசைக்காக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜேஃப் ஜிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் இணைந்து இயக்கியுள்ளனர். புகழ்பெற்ற பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே வாழ்க்கை வரலாறு தான் இப்படம் என்பது நினைவுக் கூரத்தக்கது. 145 படங்கள் உள்ளடக்கிய நீளமான பட்டியலில், 'பீலே' படத்துக்கான இசையமைப்பும் இடம்பெற்றிருக்கிறது. சிறந்த பாடலுக்கான விருதுப்பட்டியலில், 'பீலே' படத்தின் 'ஜ...

Bharath in Murugathas Film

Image
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பரத்..! தமிழில் ‘கத்தி’, ஹிந்தியில் ‘அகிரா’ படங்களை முடித்து விட்டு மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, நடிகர் பரத் ஒப்பந்தமாகியுள்ளார். அதனை ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக பரத்தின் படங்கள் ஜொலிக்காத நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ajith film's song became league

தல அஜித் நடிப்பில் தல-57 பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை தற்போது எடுத்து வருகின்றார்களாம். இந்நிலையில் தல-57க்கு அனிருத் தான் இசை என்பது அனைவரும் அறிந்ததே, அனிருத் சமீபத்தில் யோகிபி பாடிய பாடல் ஒன்றை பதிவு செய்தார். இந்த கம்போஸிங்கின் போது ஒரு சில நொடிகள் இசை லீக் ஆகியுள்ளது, இவை படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ... https://twitter.com/ThalaAjith_FC/status/807958223923937280

A massive hit in the remake of the film, Ajith

Image
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் இவர் அடுத்து பாலிவுட்டில் ரூ 100 கோடி வசூல் செய்த டியர் ஜிண்டாகி படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இப்படத்தில் ஷாருக்கான் சில காட்சிகள் தான் வருவார், அவரின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது

Chennai28II Movie Review

Image
ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது. தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார். ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீ...

Khaidi No 150 Official Teaser || Mega Star Chiranjeevi || Kajal Aggarwal || V V Vinayak || DSP

Image

Modified release film script Suseenthran

Image
வெளியான  படத்திற்கு திரைக்கதையை மாற்றிய சுசீந்திரன், மாவீரன் கிட்டு படக்குழுவினர்கள் அதிரடி மாவீரன் கிட்டு கடந்த வாரம் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் பல இடங்களில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் இன்று முதல் இப்படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இவை கண்டிப்பாக ஒரு புது முயற்சி தான், இதன் மூலம் படத்திற்கு இன்னும் கூட்டம் வர வாய்ப்புள்ளது.

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

Image
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுக்கு நேர்ந்த கொடுமை ஜெயலலிதா மறைவு ஒட்டுமொத்த இந்தியாவேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வடிவேலு ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதை தொடர்ந்து அவர் 5 வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது கத்திச்சண்டை படத்தில் நடித்துள்ளார். நேற்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுவை உள்ளே விடவில்லையாம், இதுக்குறித்து ‘கடைசியாக அந்த தாய் முகத்தை பார்க்கலாம் என்று வந்தேன், ஆனால், கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை’ என்று சமாளித்து பேசினார்.

Ajith's tender tribute

Image
பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜெயலலிதாவின் மரணம்- அஜித்தின் உருக்கமான அஞ்சலி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கையில், "அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் அஜித்

Vijay Antony's grandson, who know?

Image
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சைத்தான் படம் செம்ம ஹிட் அடித்துள்ளது. மேலும், விஜய் ஆண்டனிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி யாருடைய பேரன் என்பதை கத்துக்குட்டி இயக்குனர் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ..

On PC 'Remo' Important information about Remake

Image
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது.   தமிழகத்தை போலவே 'ரெமோ' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் தெலுங்கு வெற்றி விழா நேற்று நடைபெற்றது.   இந்த வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், பாக்யராஜ் கண்ணன், அனிருத், தில் ராஜூ, பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   இந்த விழாவில் பேசிய பி.சி.ஸ்ரீராம், 'ரெமோ' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், முன்னணி பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.   எனவே 'ரெமோ' படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Nasser shocked by the shock news producers

Image
நடிகர் நாசரின் மகன் லுத்புதீன்பாஷா கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பறந்து செல்ல வா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் . இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது, இதில் பேசிய நாசர் நான் ஒரு தகப்பன் என்ற முறையில் இங்கு பேசவரவில்லை, தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன். நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை. பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந...

Make a Kaththi in the film remake of the comedy actor Satish!

Image
இளைய தளபதி விஜய் நடித்துள்ள படங்களில் முக்கியமானது கத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 அக்டோபரில் ரிலீஸ் ஆனது. தற்போது இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனுடைய போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 25 இல் சிரஞ்சீவி பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. ஸ்ரேயா சரண், காஜல் அகர்வால், ராய் லட்சுமி ஆகியோர் நடிக்க விநாயக் இயக்குகிறார். தற்போது அந்த ஷூட்டிங்கில் சிரஞ்சீவியுடன் பைரவா படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சதிஷ் போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Saithan Tamil Movie Review

Image
எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் தொடர்ந்து செய்பவர் விஜய் ஆண்டனி. இதே வருடத்தில் பிச்சைக்காரன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர் மீண்டும் சைத்தான் மூலம் களம் இறங்கியுள்ளார். இந்த முறையும் ரசிகர்களை கவர்ந்தாரா பார்ப்போம். கதைக்களம் விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது. இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் பின் என்ன ஆனது, ஜெயலட்சுமி யார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் விஜய் ஆண்டனி பாய் வேஷம் போட்டாலும் சரி, ஐயர் வேஷம் கட்டினாலும் சரி அப்படியே பொருந்தி போகிறார். அப்பாவி லுக்கிற்காகவே அளவெடுத்து செய்தவர் போல, தனக்கு அடிக்கடி கேட்கும் குரலை கண்டு அவர் பயப்படும் போது நம்மையும் பயத்தில் ஆழ்த்துகிறார். அருந்ததி நாயர் தான் படத்தின் மிக மு...

Rekka Movie Review

Image
விஜய் சேதுபதியின் முதல் மாஸ் முயற்சி என்பதே றெக்கைக்கு ரசிகர்களின் மனதில் கிடைத்த மிக பெரிய எதிர்பார்ப்பு.  இந்த முதல் முயற்சியை அவர் ஒப்படைத்திருப்பது 'வா டீல்'  பட  இயக்குனர் ரத்தின சிவாவிடம், எந்த அளவு இருவரும் வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  படத்தின் ஆரம்பித்திலேயே தாதா காபிர் கான் இன்னொரு தாதாவான ஹரிஷ் உத்தமனின் தம்பியை கொல்கிறார் அவரை தக்க சமையத்தில் பழி வாங்குவேன் என்று பின்னவர் சபதமெடுக்கிறார்.  விஜய் சேதுபதி தந்தை கே எஸ் ரவிக்குமார் மற்றும் தாய் தங்கையுடன் கும்பகோணத்தில் வசிக்கிறார்.  நண்பன் சதீஷுடன் சேர்ந்து மாப்பிள்ளையை பிடிக்காத மணப்பெண்களை கடத்தி இஷ்ட பட்டவர்களுடன் சேர்த்து வைப்பதில் பெயர் போனவர்கள்.  ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனின் திருமணத்திலேயே மணப்பெண்ணை கடத்தி விடுகிறார்கள்  ஆனால் ஹரிஷ் தன் கொடூரத்தை காட்டாமல் விட்டு விடுகிறார்.  விஜய் சேதுபதியின் தங்கை கல்யாணத்தன்று சதிஷ் செய்யும் ஒரு சில்மிஷத்தால் மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஹரிஷ் ஹீரோவிடம் மதுரையிலிரு...

Devi Review

Image
பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம். கதைக்களம் கோலிவுட்டே பேய் பிடியில் இருந்து தற்போது மீண்டு வர, இயக்குனர் விஜய் பாலிவுட் வரை தற்போது இந்த பேய் ட்ரெண்டை எடுத்து கொண்டு சென்றுள்ளார், மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார், ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம் ஒரு சில மாற்றங்களை உணர்கிறார், என்ன என்று பார்த்தால் அவர் உடலில் ரூபி என்ற ஆவி புகுந்துள்ளது தெரிகிறது, ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறா...

Remo Review

Image
ரெமோ: சிவகார்த்திகேயனின் ரசிக்கத்தக்க புது முயற்சி தொடர் வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில், மிக அதிக பட்ஜெட், பிரம்மாண்ட பிரமோஷன், முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருக்கும் புதுமை என பல்வேறு காரணங்களுக்காக மிக முக்கியமான படம். இந்தப் படத்தில்  ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை விமர்சனத்தைப் படித்து தெரிந்துகொள்வோம். சிவகார்த்திகேயன் (சிவகார்த்திகேயன்) நடிகனாக விரும்பும் வேலையில்லா இளைஞன். சினிமா ஹீரோ ஆகும் கனவில் இருப்பவன். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைக் கண்டதும் காதல்வயப்படுகிறான். அவளிடம் காதலைச் சொல்லப் போகையில் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. எனவே நடிகனாகும் முயற்சியில் நர்ஸ் வேஷம் போடுகிறான். ஆனால் அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காவ்யாவுடன் நெருக்கமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவளிடம் நர்ஸ் ரெமோ ஆக அறிமுகமாகி அவள் மருத்துவராக பணியாற்றும் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து தனது காதலியைக் கைப்பற்ற முயற்சிக்கிறான். சிவகார்த்திகேயனின் முயற்சிகள் கைகூடியதா என்பதே மீதிக் கதை. படத்தின் ட்ரைல...

Iru Mugan Review

Image
கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரமின் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியன் எம்பஸியை ஒருவர் மட்டுமே தாக்குகிறார். அவருக்கு எப்படி இத்தனை பலம் வந்தது என்று பார்த்தால் ஹின்ஹேல்லர் (Inhaler) மூலம் ஒரு கெமிக்கல் எடுத்துகிறார் என்பது தெரிய வருகிறது. பிறகு தன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் விக்ரமை இந்த கேஸில் நியமிக்கின்றனர். அவரும் ஒரு பெயரை கேட்டதும் உடனே ஓகே சொல்கிறார். அவர் பெயர் தான் லவ். பிறகு தான் தெரிகிறது இந்த கெமிக்கல் மருந்தை தயாரிப்பது லவ், விக்ரம் மனைவி இறந்ததற்கும் லவ் தான் காரணம் என்று. இதை தொடர்ந்து லவ் யார், விக்ரம் இந்த சதிதிட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை பரபரப்பான ஸ்கீன் ப்ளேயால் மிரட்டியிருக்கிறார் ஆனந்த ஷங்கர். படத்தை பற்றிய அலசல் விக்ரம் இன்னும் எத்தனை படத்தை தாங்கி பிடிப்பார் என்று தெரியவில்லை, ஒரே ஆளாக முழுப்ப...

Kidaari Review

Image
சசிகுமார் படம் என்றால் கிராமம், அருவா, வெட்டு, குத்து, கொலை, கொஞ்சம் காதல், காமெடி என்ற பார்முலாதான் சுப்பிரமணியபுரம் படத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'கிடாரி' படமும் அதே பாணியில் உள்ளதா? அல்லது வித்தியாசத்தை தொடங்கியுள்ளாரா? என்பதை பார்ப்போம்.   தென்மாவட்டத்தை சேர்ந்த சாத்தூரில் வேல.ராமமூர்த்தி வச்சதுதான் சட்டம். அவரை எதிர்க்கும் யாரும் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அவரை காட்பாதர் போல நினைத்திருக்கும் கிடாரி சசிகுமார் எதிரிகளை வீழ்த்திவிடுவார். சசிகுமார் இருக்கும் தைரியத்தில் ஊரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேல.ராமமூர்த்தியை மர்ம நபர்கள் கொன்று விடுகின்றார்கள். சசிகுமாரின் பாதுகாப்பையும் மீறி கொலை செய்தவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து சசிகுமார் பழிவாங்கினாரா? என்பதை அவிழ்க்கும் முடிச்சுகள்தான் இந்த படத்தின் கதை.   சசிகுமார் கிடாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். கிராமத்து நடை, உடை, பாவனை எல்லாம் சசிகுமாருக்கு கைவந்த கலை என்பதால் அவர் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். வழக்கமாக ஏற்று நடிக்கும் வே...

South Indian Actors pay last respects to ‪‎NaMuthukumar‬

Image

Wagah Movie Review

Image
தமிழ் சினிமாவில் ஆடியன்ஸிற்கு நரம்பு புடைக்கும் படி ஒரு சில படங்கள் வரும். அந்த வகையில் ஹரிதாஸ் என்ற தரமான படத்தை இயக்கிய குமரவேலின் அடுத்த படைப்பு தான் இந்த வாகா. இதுவரை மிலிட்ரியை பற்றி மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த வாகா முதன் முறையாக இந்திய பார்டரில் வேலைப்பார்க்கும் ஆர்மி ஆபிசர்ஸ் பற்றி கூறியுள்ளனர். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் சிறைச்சாலையில் விக்ரம் பிரபு இருக்க, ப்ளாஷ்பேக் காட்சிகளாக படம் விரிகிறது. விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என எண்ண, அவருடைய தந்தை மளிகை கடையில் வந்து உட்கார் என கூறுகிறார், தந்தையின் தொல்லையில் இருந்து விடுபடவும், மிலிட்டிரியில் சரக்கு கிடைக்கும் என்பதற்காகவும் BSF-ல் வேலைக்கு சேர்கிறார். அங்கு தனிமையில் வாட, இதற்கு சொந்த ஊரே பராவயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகிறார், அந்த தருணத்தில் யதார்த்தமாக ஹீரோயினை பார்க்க, பிறகு என்ன பார்த்தவுடன் காதல், பட்டாம்பூச்சி பறக்க, பல்ப் வெடிக்க அவர் பின்னே சுற்றுகிறார். பிறகு காஷ்மீரில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும்...

Thirunaal Movie Review

Image
ஜீவா நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் திருநாள். இதற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் இயக்க, ஸ்ரீ இசையமைத்துள்ளார். கதைக்களம் தஞ்சாவூர், கும்பக்கோணம் இந்த இரண்டு ஊரிலும் நாகா(சரத்) வைத்தது தான் சட்டம், ஒரு முறை அவர் உயிரை பறிக்க வருபவனை கொன்று ஜீவா நாகாவிடம் நற்பெயரை சம்பாதித்து அந்த கூட்டத்தில் ஒருவனாகின்றான். எதற்கு எடுத்தாலும் வெட்டுக்குத்து என ஜீவா யார் பேச்சையும் கேட்காமல் நாகா சொல்வதை மட்டும் கேட்டு, பல அநியாய வேலைகளை பார்க்கிறார், கிட்டத்தட்ட ஒரு கடவுள் போல் நாகவை ஜீவா பார்த்து வருகிறார். ஒருக்கட்டத்தில் நாகா, தன்னை வெறும் கூலிக்காக மட்டுமே தான் பயன்படுத்துகிறார் என தெரியவர, இனி சண்டை எதுவும் வேண்டாம் என ஜீவா ஒதுங்கி இருக்கிறார், ஆனால், எங்கு சென்றாலும் தன்னை பிரச்சனைகள் சூழ்ந்து நிற்க ஜீவா மீண்டும் அருவாளை எடுக்க, போகப்போகும் உயிர் ஜீவாவா? நாகாவா? என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் ஜீவ...

Kabali Review

Image
வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது. அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது...இதோ... கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல். அவர் சிறையிலிருந்து வந்த உடனே ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின் கதைப்போக்கு மாறுகிறது. க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா எ...

Kapali leaked on the Internet

Image
கபாலி படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் இதற்கு முன்பாகவே லீக்கானது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் 2 நிமிட உள்ள இண்ட்ரோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி உள்ளது. வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்கின்றனர். இந்த காட்சி வாட்ஸ்அப்பில் தீயாய் பரவிவருகிறது. இந்த காட்சியில் எவ்வித ரசிகர்களின் சத்தமும் இல்லை, யாருக்கோ திரையிடப்பட்ட ப்ரிவியூ காட்சி தான் என்று கூறப்படுகிறது. இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

A few hours before the release of the superstar Rajani's kapali the official poster of the film is a duplicate of one already released Tamil movie .........?

Image

Kamal stray from the floor - to hospital

Image
கமல்ஹாசன் சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இப்படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் வீடு திரும்பினார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் தவறி விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் மற்றும் கால் எலும்பு முறிவடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இவர் குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Dhilluku Dhuddu Full Movie Review

Image
தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு. கதை சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back. பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் காதல். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் அந்த பங்களாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு எதற்காக செல்கிறார்கள் பேய் இவர்களை என்ன செய்தது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த தில்லுக்கு துட்டு. படத்தை பற்றிய அலசல் இனிமே ஹீரோதான் என பட்டையை கிளப்பி வரும் சந்தானம், இப்படத்திலும் இவருக்கு சூட் ஆகும் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார், காமெடி டான்ஸ் ஃபைட் என எல்லா ஏரியாவிலும் பவுண்டரி விலாசுகிறார். ஷனாயா பார்க்க அழகாக இருக்கிறார் நடிப்பிலும் குறை சொல்லும் படி இல்லை. காமெடி படம் என்றால் கண்ணை ம...

Gorgeous-SuperTalented Beauties at ‪SIIMA‬ ‪RedCarpet‬

Image

RemoFirstLook‬ & ‪‎RemoTitleTrack‬ ‪‎RemoTitleSong‬ ‪Launch. Full Album

Image